Birthday Wishes

Birthday Wishes to Elder Brother in Tamil | Happy Birthday Anna | பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

நட்பினை போல் நினைவுகளை

கொட்டும் உயிரோட்டமான

அகராதியின் மறுவடிவம்

அண்ணன்.. இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள் அண்ணா..!

என்னை கவனிக்க ஒரு தந்தை

போதாதென்று இறைவனால்

அனுப்பி வைக்கப்பட்ட

இன்னொரு தந்தை..

அவன்  “என் அண்ணா”..

என் அன்பு அண்ணனுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

எவ்வளவு கஷ்டமான

சூழ்நிலையாக இருந்தாலும்

நம்ம அண்ணன் நம்ம கூட

இருந்தா போதும் எல்லாமே

சரி ஆகிவிடும்..

அன்பு அண்ணனுக்கு இனிய

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..!

அன்னையாய் நீ அருகில்

இருந்த நிமிடங்கள்..

தந்தையாய் நீ எனக்கு

தைரியம் கொடுத்த நிமிடங்கள்

என்றுமே மறக்க முடியாதவை..!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பு அண்ணா..!

ஆணின் அன்பில் மென்மை

இல்லாமல் இருக்கலாம்

ஆனால் உண்மை இருக்கும்..!

இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள் அண்ணா..!

என் அன்பு அண்ணனே நீ

செலுத்தும் அன்பினை ஈடு

செய்ய இந்த உலகில்

வேறு எந்த உறவும் இல்லை..

அன்பு அண்ணனுக்கு இனிய

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

என் அன்பு அண்ணனே உனது

வாழ்வில் இன்பங்கள் மட்டுமே

நிறைந்திருக்க வேண்டும்..

இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள் அண்ணா..!

விளக்கின் எண்ணெயாய்

நீ இருந்து என்னை சுடர் விட்டு

எரிய செய்யும் அற்புதம் நீ..

இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள் அண்ணா..!

உயிராய் நினைத்து எனக்கு

நடை பழக கற்றுக்

கொடுத்தவன் நீ..

இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள் அண்ணா..!

ஒவ்வொரு அசைவிலும்

நான் கலங்கிடக் கூடாதென்று

தூக்கத்தை தொலைத்தவன் நீ…

என் அன்பு அண்ணனுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

கடவுள் எனக்கு கொடுத்த வரம்

என் அண்ணன்..

இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள் அண்ணா..!

அண்ணன் இருப்பவர்கள்

எல்லாம் கொடுத்து

வைத்தவர்கள்..

இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள் அண்ணா..!

எனக்காக அனைவரையும்

எதிர்த்து நிற்கும் உறவு

என்றால் அது என் அண்ணன்

மட்டும் தான்.. என் அன்பு

அண்ணனுக்கு இனிய

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

தந்தை அன்பு அது

பிறக்கும் வரை..

தாயின் அன்பு அது

வளரும் வரை..

அண்ணன் ஒருத்தன்

வந்து தரும் அன்போ..

உயிரோடு வாழும் வரை..

இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள் அன்பு அண்ணா..!

யாருக்காகவும் எதற்காகவும்

எப்பொழுதும் உன்னை

விட்டுக் கொடுக்கமாட்டேன்

அண்ணா.. கடவுள் வந்து

கண் முன் நின்று

ஒரு வரம் தருகிறேன் கேள்

என்றால் சாகும் வரை

என் அண்ணனின் அன்பு

மட்டும் போதும் என்பேன்..

இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள் அண்ணா..!

Related Articles

Back to top button